17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பெரம்பலூர் அருகே சினிமாவை மிஞ்சிய பயங்கரம்; போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு..

பெரம்பலூர் அருகே சினிமாவை மிஞ்சிய பயங்கரம்; போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு..

எழுதியவர்: Askar January 24, 2026, 6:04 pm

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே குற்றவாளிகளை அழைத்துச் சென்ற வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரவுடி வெள்ளை காளி உள்ளிட்ட 2 குற்றவாளிகளை போலீசார் புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரவுடி வெள்ளை காளி மீது 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பழிக்குப் பழியாக கடந்த 22 ஆண்டுகளில் 21 கொலைகள் நடந்ததைத் தொடர்ந்து, இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் விக்னேஷ்குமார், மாரிமுத்து பாண்டி ஆகிய 2 காவலர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், தாக்குதலில் இருந்து 4 காவலர்கள் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். மேலும் குற்றவாளிகள் இருவரும் தற்போது போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

 காரில் வந்த கும்பல் ரவுடி வெள்ளைக்காளியை குறிவைத்து தாக்குதல்.

சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு. மர்மநபர்கள் பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!