18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

எழுதியவர்: Askar January 24, 2026, 1:05 pm

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

விரிவடையும் பிரபஞ்சம்..!

அத்தியாயம் 48

(நமது) வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம்.

(திருக்குர்ஆன் 51:47)

இந்த திருக்குர்ஆனின் வசனத்தில் வானத்தை படைத்து அதனை விரிவுபடுத்துவோம் என்று கூறப்படுகிறது.இப்போது பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே செல்கிறது. சூரியன் சுழல்வதுடன் மணிக்கு 9 லட்சம் கி.மீட்டர் வேகத்தில் நாளொன்றுக்கு இரண்டு கோடி கி.மீட்டர் தூரத்தை கடந்து ஓடிக்கொண்டே இருக்கிறது.

அதற்கேற்ப பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே செல்கிறது.

பிரபஞ்சம் படைக்கப்பட்ட காலம் முதல் நாள்தோறும் இரண்டு கோடி கிலோமீட்டர் சூரியன் ஓடுவதிலிருந்து பிரபஞ்சம் ஒவ்வொரு வினாடியும் விரிவடைந்து கொண்டே செல்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இன்றைய விஞ்ஞானமும் பிரபஞ்சம் விரிவடைகிறது. (Universe is Expanding ) மேலும், விரிவாக்கம் வேகமடைந்து (Accelerating) வருகிறது.

இது விண்மீன் திரள்களை, (Galaxies) ஒன்றுக்கொன்று விலக்கித் தள்ளுகிறது. இது பெருவெடிப்பு (BigBank theory) நிகழ்வுக்குப் பிறகு, தொடங்கி விண்மீன் திரள்கள் ஒன்றுக்கொன்று விலகிச்செல்வதிலிருந்து, இந்த விரிவாக்கத்திற்கு “இருண்ட ஆற்றல்” (Dark Energy) காரணம் என்று கூறப்படுகிறது. திருக்குர்ஆனின் மொழியில் இறைவனின் ஆற்றல் என்று கூறலாம். பல காலமாகவே இந்தப் பிரபஞ்சம் நிலையான ஒன்றுதான் என்று விஞ்ஞானிகள் கூறிவந்தனர். 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் ரஷ்ய இயற்பியல் விஞ்ஞானி அலெக்சாண்டர் ஃபிரைட்மேனும், பெல்ஜிய விஞ்ஞானி லேமைட்ரீயும் பிரபஞ்சத்தின் விரிவடைதலை கண்டறிந்தனர். ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியில், விண்வெளி திரள்கள் நம்மில் இருந்து விலகிச் செல்வதை காணமுடிகிறது. பிரபஞ்சம் சோப்புக் குமிழ் போல உப்பிக்கொண்டே போகும் ஒரு கோளம் என்று விஞ்ஞானி ஹப்பிள் கூறுகிறார்.

இது பிரபஞ்சத்தில் உள்ள இடம் மற்றும் நேரமே (Time, space) விரிவடைகிறது என்று குறிப்பிடுகிறார்கள். திருக்குர்ஆனும் “பூமியை விரித்தான்” அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குறிப்பிடுகிறது. ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு பெருவெடிப்பில் (Big Bang )தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்குதலில் (Big crunch) ‌நொறுங்கிப் போகலாம்‌ என்று கூறுகிறார். 20 ஆம் நூற்றாண்டு வரை ஐசக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் போன்ற தலை சிறந்த விஞ்ஞானிகள் கூட அறியாத கருத்தை திருக்குர்ஆன் 1447 ஆண்டுகளுக்கு முன்பே பிரபஞ்சம் விரிவடைகிறது என்று தெளிவாக கூறிவிட்டது. மகா வெடிப்பு (Big Bang)நிகழ்ந்த பிறகு,விரிவடைந்த பிரபஞ்சம் ,அதன் வெடிப்பு வேகம் குறையும் போது பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள், பால்வெளி மண்டலங்கள்,போன்றவை ஒன்றையொன்று இழுத்து சுருங்கி,தொடங்கிய நிலைக்கே வந்துவிடும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதிநவீன தொலை நோக்கியில் ஆராயும்போது, வேகம் குறையாமல் பிரபஞ்சம் விரிவடைவதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இந்த வேகத்தில் பிரபஞ்சம் விலகிச் சென்று கொண்டிருந்தால், ஈர்ப்பு விசை வலுவிழந்து விடும். அதனால் நம்மைச்சுற்றி உள்ள பொருட்கள் எல்லாம் பூமியில் இருந்து மேலே எழுந்து முதலில் மிதக்க ஆரம்பித்து எல்லாப் பொருட்களும் ,அணுஅணுவாகப் பிரிந்து‌ விலகிச் சென்றுவிடும்.சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லா கிரகங்களும், சூரியனை விட்டு பிரிந்து சென்று விடும்.

தொடர்ந்து பிரபஞ்சம் விரிவடையும் போது,பிரபஞ்சம் அழிந்து விடும் என்ற கோட்பாட்டை விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.திருக்குர்ஆன் கூறும் பிரபஞ்சம் விரிவடைதல், எல்லாமே அழிந்துவிடும் என்ற கருத்துக்கள் இன்று உண்மைப்படுத்தப் படுகிறது.

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! நாளை மற்றொரு செய்தியை ஆராய்வோம்..!

‘கப்ளிசேட்’

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!