மதுரை மாவட்டம் சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே நடைபெற்றது டாக்டர் எம் வி எம் மருதுபாண்டியன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றினார் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். தொழிலதிபர் மணி முத்தையா வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார் பள்ளி நிர்வாகி வள்ளி மயில் முன்னிலை வகித்தார். முதல்வர் தீபா ராகினி வரவேற்றார். 50 மீட்டர் ஓட்டப்பந்தயம் 100 மீட்டர் ஓட்ட பந்தயம் குண்டு எறிதல் வட்டி எறிதல் தொடர் ஓட்டம் கோக்கோ வாலிபால் ஆகிய போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர் வினோத் பாண்டியன் வழி நடத்தினார். இதில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ மாணவியர்
எழுதியவர்: mohan January 24, 2026, 11:36 am




You must be logged in to post a comment.