திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்.!
பாலைவனக் கப்பல்.!
அத்தியாயம் 47
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?
(திருக்குர்ஆன் 88:17)
நிரப்பப்பட்ட கப்பலில் அவர்களின் சந்ததிகளை நாம் ஏற்றியதும், அவர்கள் ஏறிச் செல்லும் அது போன்றதை (நிலத்தில்) அவர்களுக்காகப் படைத்ததும் அவர்களுக்குரிய சான்றாகும். (திருக்குர்ஆன் 36:41,42)
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் பார்க்க வேண்டாமா?
என்று கூறுகிற திருக்குர்ஆனின் வசனம் நம்மை ஆராயத் தூண்டுகிறது. ஒட்டகம் பாலைவனத்தில் வாழும் ஒரு விலங்கு. இது பாலைவனங்களில் எளிதாக பயணம் செய்யவும், சுமைகளை தூக்கிச்செல்லவும் பயன்படுகிறது. ஒட்டகங்களை போரிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒட்டகம் நீர் மற்றும் உணவு இல்லாமல் நீண்ட நாட்களுக்கு வாழும்.அதன் முதுகிலுள்ள திமில் கொழுப்பை சேமிக்கிறது. இதை சிதைத்து ஆற்றல் மற்றும் நீராக தேவைப்படும் போது ஒட்டகம் மாற்றிக் கொள்கிறது. திமிலிலுள்ள கொழுப்பு ஒரு போர்வையாக செயல்பட்டு, வெப்பத்தில் இருந்து பாதுகாத்து ஒட்டகத்தை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது. ஒட்டகங்களுக்கு ஒற்றை மற்றும் இரட்டை திமில்கள் இருக்கின்றன. இரட்டை திமில் உள்ள ஒட்டகங்கள் வலிமையாக இருக்கின்றன. இவை பலவகையான தாவரங்களையே உண்கிறது. ஒட்டகம் ஏழு அடி வரை உயரமும் 400-800 கிலோ வரை எடையும் இருக்கும். ஒட்டகத்தின் பால் “வெள்ளைத் தங்கம்” என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. சங்க இலக்கியங்களிலும் ஒட்டகங்களை பற்றிய குறிப்புகள் உள்ளன. இவை வாசனை, மற்றும் உடல்மொழி மூலம் தொடர்பு கொள்கின்றன. ஒட்டகட்டதின் ஆயுட்காலம் 40-50 ஆண்டுகள் என கூறப்படுகிறது. ஒட்டகம் ஒரே நேரத்தில் 200 லிட்டர் நீரை அருந்துகிறது. ஒட்டகங்களால் ஒரு மணிக்கு அதிக பட்சமாக 40 மைல் வேகத்தில் ஓடமுடியும். ஒட்டகங்களின் கண்களை பாலைவன மணல் தூசிகளில் இருந்தும், வெயிலிருந்தும், பாதுகாக்க மூன்று கண் இமைகள் உள்ளன. சூரியனின் வெப்பத்தாக்குதல்களிலிருந்து அதன் ரோமங்கள் பாதுகாக்கின்றன. மணலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அதன் நாசி துவாரங்கள் மூடப்பட்டு இருக்கும். ஒட்டகங்கள் பகலில் சுறுசுறுப்பாக இருக்கின்றன. இரவில் நின்றுகொண்டே ஆறுமணி நேரம் வரை தூங்குகின்றன. பாலைவனத்தில் அதன் தட்பவெப்ப நிலைகளை தாங்கி வாழவும், எளிதாக சுமைகளை சுமந்து பயணிக்கும் வகையிலும், ஒட்டகத்தின் உடலமைப்புகள் அமைந்துள்ளன. அதன் நீண்ட கால்கள் சூடான மணலிலிருந்து பாதுகாக்கின்றன. ஒட்டகங்கள் நீரை குடித்து சேமித்து கொள்ளும். மிகக்குறைந்த அளவிலேயே சீறுநீரை வெளியேற்றுகின்றன. அதன் சாணம் எப்போதும் வறண்டே இருக்கும்.அவை தன் உடம்பிலிருந்து வியர்வையை வெளியேற்றுவதில்லை.ஒட்டகங்கள் மென்மையான மணலில் எளிதாக நடக்க உதவும் பெரிய தட்டையான பாதங்களை கொண்டுள்ளன.அதன் தட்டையான பாதங்கள், அதன் உடல் எடை, அது சுமக்கும் எடைக்கு எதிராக மணலில் மூழ்குவதை தடுக்கின்றன. ஒட்டகத்தில் மிக நீண்ட பெருங்குடல் உள்ளது.அது தண்ணீரை உறிஞ்சி தேக்கி வைக்கிறது.
ஒட்டகங்களுக்கு வாய்,தோல் ஆகியவை மென்மையான திசுக்களால் ஆனது.
ஆகவே முள் மற்றும் கூரான செடிகளை மெல்ல உதவுகிறது. பாக்டிரியன் என்ற இரட்டை திமில் ஒட்டகங்கள் குளிர்காலத்தில் தங்களை பாதுகாக்க தடிமன் மற்றும் கரடுமுரடான தோலை பெற்றுள்ளன.கோடையில் வெப்பம் அதிகரிக்கும்போது அதை தானாக உதிர்த்து விடுகின்றன. ஒட்டகத்தைப்பற்றிய உடற்கூறு செய்திகள் எல்லோருக்கும் தெரிந்து இருந்தாலும், அதன் உடலமைப்பை
பாலைவனத்தில் பயணிக்கும் அளவிற்கு மிகத்துல்லியமாக படைத்த இறைவனுக்கே எல்லாப்புகழும்.
இந்த செய்தி மூலம் உலகில் இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை படைப்புகளுக்கும், நோக்கம் இருக்கிறது.
அதற்கு ஏற்றவாறு அதனை படைத்து அதனை மனிதனுக்கு பயன் அளிக்கும் வகையில் கட்டுப்படுத்தி இறைவன் தந்திருப்பதை மனிதன் சிந்திக்க வேண்டும்.
திருக்குர்ஆனின் வசனம் இதனை மனிதர்களிடம் ஆராயச் சொல்கிறது.
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்…!
நாளை மற்றொரு செய்தியை ஆராய்வோம்..!
‘கப்ளிசேட்’




You must be logged in to post a comment.