18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

எழுதியவர்: Askar January 22, 2026, 1:58 pm

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

மீன் வயிற்றில் ஒரு அதிசய மனிதர்..!

அத்தியாயம் 46

இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது.

(திருக்குர்ஆன் 37:142)

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். “அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்” என்று நினைத்தார். “உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன்.நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்” என்று இருள்களிலிருந்துஅவர் அழைத்தார்.

(திருக்குர்ஆன் 21:87)

இறைவனின் தூதர் நபி யூனூஸ்(அலை) அவர்களை மீன் விழுங்கி, அதன் வயிற்றில் அவர்கள் சில காலம் வாழ்ந்து இறைவனின் மன்னிப்பையும், கருணையையும், பெற்று மீன் வயிற்றிலிருந்து மீண்டும் நிலத்தில் உமிழப்பட்டார்கள் என்ற வரலாறு இறைவனின் வல்லமைக்கு சொந்தமானது.இருப்பினும் பிற சமூக மக்களின் புரிதலுக்காக இதன் சாத்தியம் பற்றி இன்றைய அறிவியல் கூறும் செய்திகள் ஆச்சரியமானது. நீலத் திமிங்கிலங்கள் (Bulue whales ) கடலில் மிகப்பெரிய மீன் இனமாகும். இது உலகில் மிகப்பெரிய விலங்கு என்று கூறப்படுகிறது. இது100அடி நீளமும், 150 டன் எடையும், கொண்டதாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த நீலத்திமிங்கலத்தின் நாக்கில் ஐம்பது பேர் உட்காரும் அளவு இடமிருக்கும் எனில் அதன் வாய்,வயிறு போன்றவற்றின் பிரமாண்டத்தை புரிந்து கொள்ளலாம். இது மிக சாதுவான பிராணியாகும். இதற்கு மூர்க்கத்தனமான குணங்கள் இல்லை. இவை நீரின் மேல் மட்டத்திற்கு வந்து தேவையான ஆக்ஸிஜனை உள்ளிழுத்து சேமித்து வைத்துக்கொள்ளும். மனிதர்கள் 15% ஆக்ஸிஜனையே உள் இழுக்கிறோம். ஆனால் திமிங்கலங்கள் 90%. ஆக்ஸிஜனை உள் இழுப்பதால் கடலின் ஆழத்திற்கு சென்றாலும், சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படுவதில்லை.

ஆக்ஸிஜன் தீரும் நிலையில் மீண்டும் மேல் பகுதிக்கு வந்து, ஆக்ஸிஜனை உள்ளிழுத்து சேமித்து கொள்கிறது.

இவைகள் இரையை தேடி கடலின் ஆழத்தில் 1000 மீட்டர் முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்கின்றன. கடலின் ஆழத்தில் கடுமையான இருளில் எதிரொலி உத்தி (Echo location) மூலம் தனது இரைகளை தேடுகின்றன. ஒரு மனிதரை காற்றுப்புகாத ஒரு அறையில் வைத்திருந்தாலும், அறையில் உள்ள காற்று அவர் சிலகாலம் உயிர்வாழ போதுமானதாகும். ஆகவே இந்த நீல திமிங்கலம் நபி யூனூஸ்(அலை) அவர்களை விழுங்கியதாக எடுத்துக்கொண்டால், அதன் பிரமாண்டமான வயிற்றுப்பகுதியும் அது சேமித்து வைத்திருக்கும் ஆக்ஸிஜனும் அவர்கள் சிலகாலம் அங்கு தங்கியிருந்து உயிர் வாழ போதுமானதாக இருக்கும். இந்த நீல திமிங்கலங்கள் நுரையீரலால் சுவாசிக்கும் வெப்ப இரத்த பிராணிகள். இவை கடல்பாலூட்டி வகையைச் சார்ந்தது. இவற்றின் கொழுப்பின் தடிமன் குளிரிலிருந்து இவைகளை காக்கிறது. ஸ்பெர்ம் வகை திமிங்கலங்கள் மிக வேகமாக நீந்திக் கூடியது. அவைகள் தமது வாழ்நாளில் உலகையே ஒருமுறை சுற்றிவரக்கூடிய தூரங்கள் நீந்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது.நீலத் திமிங்கிலங்கள் நீரிலுள்ள மிதவை உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றன.குறிப்பிட்ட காலம் மீன்வயிற்றிலிருந்த யூனூஸ் (அலை) அவர்கள் மிகவும் நலிவுற்ற உடல் நிலையோடு நிலத்தில் உமிழப்பட்டார்கள்.இதுபோன்ற ஆய்வுகள் மனிதன் மீன் வயிற்றில் குறிப்பிட்ட காலம் உயிரோடு வாழ்ந்து இருக்க முடியும் என்பதை காட்டுகிறது.அல்லாஹ்வின் வல்லமையையே இந்நிகழ்வு வெளிப்படுத்துகிறது.

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! நாளை மற்றொரு செய்தியை ஆராய்வோம்..!

‘கப்ளிசேட்’

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!