17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » எஸ்டிபிஐ கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு..

எஸ்டிபிஐ கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு..

எழுதியவர்: Askar January 21, 2026, 7:32 pm
கர்நாடக மாநிலம் மங்களூரில், ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் எஸ்டிபிஐ கட்சியின் இரண்டுநாள் பொதுக்குழு கூட்டம் கட்சியின் துணைத் தலைவர் முகமது ஷஃபி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் கடந்த கால செயல்பாட்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. இறுதியாக, 2026 முதல் 2028ஆம் ஆண்டு வரையிலான கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அதன்படி, கட்சியின் தேசியத் தலைவராக எம்.கே. ஃபைஸி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். செயல் தலைவராக முகமது ஷஃபி, துணைத் தலைவர்களாக தமிழகத்தைச் சேர்ந்த தெஹலான் பாகவி மற்றும் சீதாராம் கொய்வால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், பொதுச் செயலாளர்களாக முகமது அஷ்ரப், ரியாஸ் ஃபாரங்கிபேட், அப்துல் மஜீத் ஃபைஸி, யாஸ்மின் ஃபரூக்கி, இல்யாஸ் தும்பே ஆகியோரும், செயலாளர்களாக அல்ஃபோன்ஸ் ஃப்ரான்கோ, சென்னையைச் சேர்ந்த யா முஹைதீன், சாடியா சயீதா, பி.எஸ்.பிந்த்ரா, தைதுல் இஸ்லாம், அதிகா சாஜித் ஆகியோரும், பொருளாளராக சென்னையைச் சேர்ந்த அப்துல் சத்தார் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், ரவிச்சந்திரன், வழ. காலிதா உள்ளிட்டோர் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!