17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தனி நபர்களை விட, கட்சிதான் பெரியது. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன்!- மு.க.ஸ்டாலின்..

தனி நபர்களை விட, கட்சிதான் பெரியது. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன்!- மு.க.ஸ்டாலின்..

எழுதியவர்: Askar January 20, 2026, 8:24 pm

கூட்டணி கட்சிகளில் நம்மை பிடிக்காத சிலர் இருக்கத்தான் செய்வார்கள். தேவையில்லாத கருத்துகளை பேசி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த அவர்கள் நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகக் கூடாது.

கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை நான் பார்த்துக் கொள்கிறேன். 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து தேர்தலில்100% களப் பணியாற்ற வேண்டும்.

தனிநபர்களை விட, கட்சிதான் பெரியது. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன்.

உட்கட்சி பிரச்சினைகள் எதுவும் எழக்கூடாது. அடுத்த 3 மாதத்திற்கு உழைப்பு, பொறுமை மிக மிக அவசியம்.

உங்களை நம்பித்தான் நான் இருக்கிறேன். நம்மை நம்பித்தான் தமிழக மக்கள் இருக்கிறார்கள்.

நம் சாதனைகளை ஒவ்வொரு வீட்டுக்கும், ஒவ்வொரு தனி நபருக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

பொங்கல் கொண்டாட்டம் முடிந்து, அனைவரும் தேர்தல் பணிக்கு தயாராக வேண்டும்.

திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து பணியாற்ற வேண்டும். நான் அனைத்தையும் கண்காணிப்பேன்.

-மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!