மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே ரயில்வே மேம்பாலத்தில் கட்ட புலி நகர் என்னும் இடத்தில் அரசு பேருந்து காரை முந்த முயன்ற போது விபத்து ஏற்பட்டு கார் மற்றும் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்ததில் பத்துக்கு மேற்பட்டோர் காயம் போலீசார் விசாரணை
கோவையில் இருந்து மதுரை வந்த அரசு பேருந்து சமயநல்லூர் அடுத்து ரயில்வே மேம்பால பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் பேருந்தை முந்த முயன்றதாகவும் பேருந்து காரை முந்தமுயன்றதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்தும் காரும் தலை குப்புற கவிழ்ந்தது இதில் அரசு பேருந்தில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது காரில் வந்த டிரைவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக அருகில் இருந்தவர்கள்108 ஆம்புலன்ஸ் மூலம் காயம்பட்ட அனைவரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
இதே இடத்தில் நேற்று மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து பழனி சென்றஅரசு பேருந்தின் பின்பக்க டயர் கழன்று விழுந்ததில் 15க்கு மேற்பட்டோர் காயம் பட்டனர் மீண்டும் அதே இடத்தில் இன்று அரசு பேருந்து விபத்திற்குள்ளாகி பத்துக்கு மேற்பட்டோர் காயம் பட்டு உள்ளனர் தொடர்ச்சியாக இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பயணிகள் மிகுந்த அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் போக்குவரத்து போலீசார் மூலம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை மறுசீராய்வு செய்து இது போன்ற விபத்துக்கள் தடுக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் தரமற்ற பேருந்துகளை இயக்குவதாலே இதுபோன்ற விபத்துக்கள் நடப்பதாக போக்குவரத்து கழக பணியாளர்களும் தெரிவிக்கின்றனர் இரண்டு நாட்களில் அடுத்தடுத்து அரசு பேருந்துகள் விபத்தில் சிக்கி 25க்கும் மேற்பட்டோர் காயம் பட்டு மருத்துவமனைக்கு சென்றது இந்த பகுதியில் பெரும் பதட்டத்தையும் அச்சத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது




You must be logged in to post a comment.