முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆரின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மறைந்த முதலமைச்சரும் அதிமுக நிறுவன தலைவருமான எம்.ஜி ஆரின் நூற்றி ஒன்பதாவது பிறந்தநாள் அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழனியில் நகர அதிமுக சார்பில் பெரியப்பா நகரில் உள்ள எம்.ஜி.ஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். முன்னதாக கட்சியினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கும் பாதையாத்திரை பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமாரசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். என். வேணுகோபாலு, நகர செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.