நிலக்கோட்டை கரும்புச்சாலை குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கரும்புச்சாலை குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு நலச் சங்கத்தின் செயலாளர் ஜெ.ஜோசப் கோவில் பிள்ளை தலமை தாங்கினார். சீனிவாசன், முனியாண்டி, நாகராஜன், பாண்டியன், மதிவாணன், முருககுமார், செல்வ முருகன், ஆ.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவின் முதல் நாளாக 15- ம் தேதி வியாழக்கிழமை மாலை குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், தனி நடனம், குழு நடனம், மற்றும் பேச்சுப் போட்டி மாறுவேட போட்டிகள், ஸ்ரீ பரதலாயா நாட்டிய பள்ளியின் நடன நாட்டிய நிகழ்ச்சிகள் ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மேலும்,16 -ம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் இருந்து மதியம் வரை அந்த பகுதியில் குடியிருக்கும் குடும்பத்தினருக்கான கயிறு இழுத்தல், உறியடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்று போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாலை 5 மணியளவில் திண்டுக்கல் கலைக்குழுவினர் வழங்கிய போர்ப்பறை முழக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பறை அடித்து பறை சாட்டி பெண்கள் ஆடிப்பாடியதை கண்டு அப்பகுதி மக்கள் மெய்மறந்தனர்.
இதனைத் தொடர்ந்து போட்டிகளில் வென்ற அனைவருக்கும் பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்படி ஒரு பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடுகளை செய்து கொடுத்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை அவர்களை அனைவரும் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.




You must be logged in to post a comment.