நிலக்கோட்டை காவல்நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலையத்தில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சட்டம் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் சத்தியபிரபா, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விமலா லாரன்ஸ் முன்னிலை வகித்தனர். காவல் நிலைய வாசலில் பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காவல்துறையினர் அனைவரும் தமிழரின் பாரம்பரிய உடையணிந்து, ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இவ்விழாவில் மைக் உசேன், ஆன்மீகச் செம்மல் பழநி முருகன், சகோதரி லிடியா, சகோதரி இருதய மேரி, என அனைத்து மதத்தினரும் சிறப்பம்சமாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மேலும் சட்டம் ஒழுங்கு காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் துணை ஆய்வாளர்கள், காவலர்கள். அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.