17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan January 14, 2026, 1:32 pm

 

கோழி பண்ணை தொழிலளர்களுக்கு ஆதரவாக கூலி உயர்வு கேட்டு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை அருகே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மாநில அமைப்பு செயலாளர் நேதாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளை விடுதலை செய்ய கோரியும், தமிழக அரசையும், காவல்துறை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!