18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

எழுதியவர்: Askar January 13, 2026, 10:10 am

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம்..!

அத்தியாயம் 37

அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. “இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?’ என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து “எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?’ என்று கேட்டான். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்’ என்று அவர் கூறினார். “அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்துவிட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!’ என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது “அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்’ எனக் கூறினார்

(திருக்குர்ஆன் 2:259)

இந்த வசனத்தில் ஒரு அற்புதமான வரலாறு கூறப்படுகிறது. நல்லடியார் ஒருவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச்செய்கிறான். அடக்கம் செய்யப்படாமலேயே நூறு ஆண்டுகள் பூமியின் மேற்பரப்பில் அவரின் உடல் கிடந்தது. ஆயினும் எத்தனை ஆண்டுகள் இவ்வாறு இருந்தோம் என்பதை அவரால் அறிய முடியவில்லை. ஒரு நாளோ அல்லது ஒருநாளில் சிறிதுநேரமோ தூங்கியதாகவே அவர் நினைத்தார். அல்லாஹ்வின் அற்புத நிகழ்ச்சியை கூறும் இந்த வசனம், அந்த மனிதரை மனிதர்களுக்கு அத்தாட்சியாக
ஆக்கியுள்ள செய்தியையும் கூறுகிறது.

மனிதர்களுக்கு அத்தாட்சியாக கூறப்படும் வசனங்களில், முன்னறிவிப்போ, அறிவியல் உண்மைகளோ, அது பற்றிய குறிப்புகளோ புதைந்து கிடப்பதை திருக்குர்ஆனில் காணலாம் என்று கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கூறப்படும் ஒரு மனிதர் தன்னுடன் ஒரு கழுதையையும், உண்பதற்கு சில உணவுகளையும், தண்ணீரையும் எடுத்துக் கொண்டு பயணம் செய்தார்.இந்நிலையில் அவரை நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்த இறைவன்,கழுதையையும் மரணிக்கச்செய்து மக்கிய எலும்புகளாக
ஆக்கினான். ஆனால் அந்த மனிதர் கொண்டு வந்த உணவுகளும், தண்ணீரும் கெட்டுப்போகாமல் அப்படியே இருந்தது. குளிர் பதனப்பெட்டியைப்போல
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பாதுகாப்பு கவசத்தை ஏற்படுத்த முடியும் என்று இந்த வசனம் முன்னறிவிப்பு செய்கிறது.பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஒரு தொழில் நுட்பம் உள்ளதை இந்த வசனம் உணர்த்துவதோடு, அத்தாட்சி என்று கூறுவதன் மூலம் ஆராய தூண்டுகிறது. இன்றைக்கு குளிரூட்டப்பட்ட தொழில் நுட்பங்கள் மிகுதியாக பயன்படுகின்றன. இன்றைக்கு உணவை கெடாமல் பாதுகாக்க Aircompressd technology என்னும் அழுத்தப்பட்ட காற்று, சிறப்பு உபகரணங்கள், வடிகட்டுதல், தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவற்றின் கலவையான தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற தொழில்நுட்பங்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கே உணவுகளை கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. ஆனால் பண்டைய எகிப்திய பிரமிடுகள்
அந்த அமைப்பிற்குள் வைக்கும் எதையுமே கெட்டுப்போகாமல் பாதுகாக்கின்றன. அந்த பிரமிடு அமைப்புகளில் கிருமிகள் வளர வாய்ப்பில்லாததால் எதுவுமே கெட்டுப்போவதில்லை என்று கூறப்படுகிறது. பிரமிடுகளின் வடிவம், பூமியில் பரவியிருக்கிற ஆற்றல் புலங்களான மின்காந்த அலைகள், காஸ்மிக் கதிர்கள், மின்னிறக்க அலைகள், நிறையீர்ப்பு அலைகள் ஆகியவற்றை உள்வாங்கி பெரிதுபடுத்தும் ஒத்த அதிர்வு அமைப்பாகும். அந்த ஆற்றல்கள் பிரமிடுக்குள் சுற்றுகின்றன. பிரமிடு தன்னைச் சுற்றிலும் ஒற்றை அதிர்வெண் அலைக்கோளத்தை உருவாக்கி கொள்வதால், உள்ளே உள்ள எல்லா பொருட்களும் அந்த சுரத்தில் அதிர்வடைகின்றன. சாதாரணமாக காந்தத்தில் விசை புலங்கள் வடமுனையிலிருந்து வெளிநோக்கியும், தென் முனையிலிருந்து உள்நோக்கியும் பரவும். ஆனால் பிரமிடுக்குள் இதற்கு நேர்மாறாக வடமுனையிலிருந்து
உள்புறமும், தென் முனையிலிருந்து
வெளிப்புறமும் பரவுகின்றன. பிரமிடுக்குள் திசுக்கள் சிதைவது மிக மிக அரிது. எனவே கிருமிகளும், பாக்டீரியாக்களும், செழித்து வளர வாய்ப்பு கிடைப்பதில்லை. இதுபோன்ற பல்வேறு அறிவியல் காரணங்களால் பிரமிடுக்குள் வைக்கும் உணவுப்பொருட்கள் கெட்டுப்போவதில்லை. இருப்பினும் மேலுள்ள திருக்குர்ஆனின் வசனம் அல்லாஹ்வின் அளப்பரிய ஆற்றலை விளக்குகிறது. மனித முயற்சியில் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பங்கள், பிரமிடு வடிவங்களின் தொழில் நுட்பம்
என்று இன்றைய அறிவியல் தொடர்ந்து ஆராய்கிறது. கெட்டுப்போகும் உணவுப் பொருட்களை,நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாத்து பயன்படுத்த Food& Processing துறை மிகப்பெரிய ஆராய்ச்சிகளை தொடர்ந்து செய்துவருகிறது.

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
கெட்டுப்போகாத அதிசய நிரூற்று!
தொடர்ந்து ஆராய்வோம்..!

‘கப்ளிசேட்’

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!