ஆறுமுகநேரியில் ஆன்லைன் மூலம் கேரளா லாட்டரி சீட்டுகள் விற்றதாக தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி சுப்ரமணியசாமி கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வராஜ் (56). இவர் ஆறுமுகநேரி வடக்கு பஜாரிலும், இவரது மகன் பாலாஜி(26) வாரச்சந்தைக்கு எதிரேயும் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். இந்த 2பேரும் கேரளா மாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் ஆறுமுகநேரியில் விற்பனை செய்து வந்துள்ளனர்.இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் பாலாஜி கடையில் சோதனையிட்டனர். அங்கு கேரள மாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்வதற்காக பயன்படுத்திய செல்போன், ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரும் சேர்ந்து லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்று வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை, மகனை கைது செய்தனர். இதில் பாலாஜி மீது ஏற்கனவே லாட்டரி சீட்டு விற்றது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக 34 வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




You must be logged in to post a comment.