மதுரை புறநகர் மாவட்ட திராவிட கழகம் சார்பாக இதுதான் ஆர்.எஸ். எஸ். பா.ஜ.க ஆட்சி,இதுதான் திரா விடம், திராவிட மாடல் ஆட்சி மற்றும் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா தொடர் பயண பரப்புரை பொதுக்கூட்டம் வாடிப் பட்டி தாதம்பட்டி மந்தையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில தொழிலாளர் பேரவை தலைவர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், எடிசன் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் மன்னர் மன்னன், மாவட்ட செயலாளர் முத்து கருப்பன், மகளிர் பாசறை துணைச் செயலாளர் பாக்கிய லட்சுமி, தி.மு.க ஒன்றிய செயலாளர் பால. ராஜேந்திரன், பேரூர் செயலாளர் பால்பாண்டியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் எரிமலை வரவேற்றார். இந்த கூட்டத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி மற்றும் திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது ஆசிரியர் வீரமணி பேசியதாவது.:-
மனு தர்மத்தில் வர்ணாசிரம பிரிவுகளில் கடைசியாக வருபவர்கள் பெண்கள். பெண்களுக்கு அந்த காலத்தில் சுதந்திரம் கிடையாது. பெண்களை நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்த்த இயக்கம் திராவிட இயக்கம். இன்று பெண்களில் ஒரு பக்கம் லாயர் இன்னொரு பக்கம் மேயர் என்றெல்லாம் இன்று எத்தனையோ பேர் வந்து விட்டனர். இன்றைக்கு பாஜகவினர் தங்கள் கையில் ஆயுதமாக திரிசூலம் வைத்துள்ளார்கள். வருமானவரித் துறை, சிபிஐ, அமலாக்கத்துறை அதை வைத்து மிரட்டி கொண்டு இருக்கிறார்கள். சுயமரியாதை சொல்லிக் கொடுக்கும் இயக்கம் தான் திராவிட இயக்கம். பெண்களு க்கு கலைஞர் தான் சொத்துரிமை வாங்கி கொடுத்தார். மக்களை சிந்திக்க வைத்த இயக்கம் திராவிட இயக்கம். இன்றைக்கு தமிழக முதல்வர் எத்தனையோ பல சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார். காலை உணவு திட்டம் என்பது இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கிடையாது. புது புது திட்டங்கள் புது புது செயல்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர். மோடிஆட்சியில் ஓட்டு திருட்டு கண்டுபிடித்துள்ளார்கள். சினிமாவில் நடிப்பது சுலபம் ஆட்சி வேறு காட்சி வேறு மக்கள் மத்தியில் காட்டலாம் என்று நினைத்தவர்களுக்கு கொம்பு சீவ பட்டு உள்ளது. தி.மு.க. கூட்டணி என்றும் அசைக்க முடியாத கூட்டணியாக உள்ளது. திமுக கூட்டணி கொள்கை கூட்டணி பதவி கூட்டணி அல்ல இது வெல்லும் கூட்டணி, நான் முதல்வரை ஒரு முறை பார்க்கும் போது கூறினேன்.உங்க வேலை என்டரி எங்க வேலை சென்டரி என்று கூறினேன். திமுக மீண்டும் வெற்றி பெறும் இவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில் திமுகமுன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் அயூப்கான், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், சோழவந் தான் பேரூர் செயலாளர் சத்திய பிரகாஷ், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், தி.மு.க முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ், வழக்கறிஞர் கோகுல்நாத், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தமிழாளன் ஒன்றிய செயலாளர் பொறியாளர் தமிழ் நிலவன், இளம்புலிகள் அணி மாநில துணைச் செயலாளர் திருவருள், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அய்யங்கோட்டை விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் பொன். பனகல் பொன்னையா நன்றி கூறினார்.




You must be logged in to post a comment.