திருச்சி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் நவீன வசதிகள் -அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையுடன் இணைந்த கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு புதிய மருத்துவ வசதிகளை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.
புற்றுநோயாளிகளுக்குதேவையான நவீன சிகிச்சை மற்றும் வலி நிவாரண மேலாண்மைக்கான சிறப்புப் பிரிவு, நோயறிதலை விரைவுபடுத்த இரண்டு புதிய ஊடுகதிர் கருவிகளின் பயன்பாடு, மருத்துவமனைத் துணிகளைத் தூய்மையாகப் பராமரிக்க நவீன இயந்திரங்களுடன் கூடிய சலவை மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அமைச்சர் கே. என்.நேரு இன்று திறந்து வைத்தார்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் குமரவேல், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் மருத்துவர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.