தடுப்புகள் இல்லாத கழிப்பிடங்கள்- தமிழ்நாடு எனும் தலைப்பிட்டு மேற்கு வங்க மாநிலத்தில் எடுக்கப்பட்ட காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த காணொளி குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளது.
பொய்: தடுப்புகளின்றி அருகருகே அமைக்கப்பட்ட கழிப்பிடங்கள் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டதாகக் குறிப்பிட்டு ஒரு காணொளி பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன? : இது முற்றிலும் தவறான தகவல். இந்தக் காணொளி தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ஒரு ஆன்மீக மாநாட்டுக்காகக் கட்டப்பட்ட தற்காலிக கழிப்பிடங்களுக்கு திரை அமைக்கப்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி இது. இதைத் தமிழ்நாடு என்று குறிப்பிட்டு வதந்தி பரப்பி வருகிறார்கள்.
தவறான தகவலைப் பரப்பாதீர்!




You must be logged in to post a comment.