17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வேதாரண்யத்திலிருந்து 110 கி.மீ. தொலைவில் டிட்வா புயல்! நாளை மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பு..

வேதாரண்யத்திலிருந்து 110 கி.மீ. தொலைவில் டிட்வா புயல்! நாளை மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பு..

எழுதியவர்: Askar November 29, 2025, 10:49 pm

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள டிட்வா புயல் வேதாரண்யத்திலிருந்து 110 கி.மீ. தொலைவிலும் சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

இது, வடக்கு – வடமேற்கு திசையில் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், நாளை (நவ., 30) அதிகாலை வட தமிழகம், புதுவை மற்றும் வடக்கு ஆந்திரக் கடல் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதோடுமட்டுமின்றி, கரையைக் கடக்கும்போது, புயலின் மையப்பகுதி சென்னை கரையிலிருந்து வெறும் 25 கி.மீ. தொலைவில் நிலவ வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை (நவ., 30) மாலை முதல் புயல் கரையைக் கடக்கக்த் தொடங்கும் என்றும் டிச. 1 வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிட்வா புயலால், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் இன்று சிவப்பு நிற (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு மிக கனமழை மற்றும் ஓரிரு இடங்களில் அதிகன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் விட்டு விட்டு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு மழை படிப்படியாகக் குறையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்திலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!