18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தி.மு.க என்ற கோட்டையை யாராலும் உடைக்க முடியாது:-துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் நடிகர் வடிவேலு பேச்சு!

தி.மு.க என்ற கோட்டையை யாராலும் உடைக்க முடியாது:-துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் நடிகர் வடிவேலு பேச்சு!

எழுதியவர்: Askar November 29, 2025, 9:41 pm

கழக இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளையோட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் மனிதநேய உதய நாள் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார்.மேலும், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆர்.ராசா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நடிகர் வடிவேலு ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் பேசிய நடிகர் வடிவேலு, கலைஞர் வழியில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடித்தி வருகிறார். பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்ற சட்டத்தை கலைஞர் கொண்டுவந்தார். அதேபேல மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் என பெண்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து அவர்களது வாழ்வில் வெளிச்சத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தி வருகிறார்.சுறுசுறுப்பாக எறும்பு போல் உழைப்பவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தலைமை என்ன பொறுப்பு கொடுத்திருக்கிறதோ அதனை அழகாக உள்வாங்கி, சிறப்பாக செயல்படுத்தி, தன்னை மாற்றிக் கொண்ட பெரிய அரசியல்வாதியாக மாறி உள்ளார் உதயநிதி. சினிமாவில் பார்த்த உதயநிதிக்கும், அரசியலில் பார்க்கும் உதயநிதிக்கும் வேறுபாடு உள்ளது.2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க 200 இடங்களுக்கு மேல் வென்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சியமைப்பார். தி.மு.க ஒரு கோட்டை அதனை யாராலும் உடைக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!