18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நிலக்கோட்டை பூமார்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூபாய் 2700-க்கு விற்பனை. மழை மற்றும் பனிப்பொழி காரணமாக  பூக்கள் வரத்து குறைவால் விலை உயர்வு.  விவசாயிகள் மகிழ்ச்சி.

நிலக்கோட்டை பூமார்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூபாய் 2700-க்கு விற்பனை. மழை மற்றும் பனிப்பொழி காரணமாக  பூக்கள் வரத்து குறைவால் விலை உயர்வு.  விவசாயிகள் மகிழ்ச்சி.

எழுதியவர்: Askar November 29, 2025, 10:23 am
நிலக்கோட்டை பூமார்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூபாய் 2700-க்கு விற்பனை. மழை மற்றும் பனிப்பொழி காரணமாக  பூக்கள் வரத்து குறைவால் விலை உயர்வு.  விவசாயிகள் மகிழ்ச்சி.
 
நிலக்கோட்டை பூமார்கெட்டில் வெள்ளிக்கிழமை  மல்லிகைப்பூ விலை ஒரு கிலோ ரூபாய் 2700-க்கு விற்பனையானது. மழை மற்றும் பனிப்பொழிவு  காரணமாக  பூக்கள் வரத்து குறைவு காரணமாக  விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 
திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை பூக்கள் சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பூக்களுக்குகென தரமும் தனி மகத்துவமும் உள்ளதால், இப்பூமார்கெட்டில் இருந்து வெளி மாநிலம் மற்றும் வெளிமாவட்ட விவசாயிகள் குவிவது வழக்கம். 
 
இதனால்,  எப்போதும் நல்ல விலைபோகும் நிலையில்,  கடந்த சில நாட்களாக அடிக்கடி பெய்து வந்த தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் உற்பத்தி மற்றும் வரத்து குறைவு ஏற்பட்டுள்ளது.  இதனால், கடந்த மாதம் ஒரு கிலோ ரூ. 200 முதல் 300  ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ மலமலவென உயர்ந்து வெள்ளிக்கிழமை ரூ 2700-க்கு விற்பனையானது. அதே போல முல்லைப்பூ 1100,  செவ்வந்தி பூ  ஒரு கிலோ ரூ. 100, பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ. 600, துளசி ஒரு கிலோ ரூ. 50, ரோஸ் ஒரு கிலோ ரூ. 200, பட்டர் ரோஸ் ஒரு கிலோ ரூ. 250, சம்பங்கி பூ ஒரு கிலோ ரூ. 70, செண்டு பூ ஒரு கிலோ ரூ. 50, அரளி ஒரு கிலோ ரூ. 300 என, அனைத்து பூக்களின் விலையும்  உயர்ந்து விற்பனையானது. 
 
தொடர்ந்து நிலக்கோட்டை பூமார்கெட்டில் வெளியூர் மற்றும் உள்ளூர்  சில்லறை வியாபாரிகள் குவிந்து வருவதால்,  பூக்களின் விலை மேலும் உயரும் என கூறப்படுவதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!