நாகை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை: கடலோரப் பகுதியில் பல இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கோடியக்கரை-20cm அதிகன மழை பதிவு..
பாம்பன் ,ராமேஸ்வரம், மண்டபம், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பதிவாகி உள்ளது…
இன்று நவம்பர் 29 வானிலை பொறுத்த வரை; மயிலாடுதுறை, காரைக்கால் ,நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பரவல இடங்களில் மிக கனமழையும் சில இடங்களில் சற்றே அதி கனமழையும் பதிவாக கூடும்..
திருச்சி,புதுக்கோட்டை ,சிவகங்கை, தஞ்சாவூர் ,பெரம்பலூர் ,அரியலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உட்பகுதிகளிலும் பரவலான இடங்களில் இன்று நல்ல மழைக்கு வாய்ப்பு.
சென்னை முதல் கடலூர் இடைப்பட்ட பகுதியில் பரவலான இடங்களில் மிதமான மிதமான மழை பெய்ய கூடும்.
நிகழ்வான தற்போது இலங்கையின் நிலப்பகுதியின் ஜாப்னாவின் தென்கிழக்கு பகுதியில் இருக்கிறது இது தொடர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் கடல் பகுதிக்கு நகர்ந்து வரும் பிறகு புயலின் மையப் பகுதியில் மீண்டும் மழை மேகங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு…
இதை தொடர்ந்து தமிழ்நாட்டின் கடலோர வழியாக பயணிக்கும் போது கடலோர மாவட்டங்களில் பரவலான இடங்களில் மழை பெய்யக்கூடும்.




You must be logged in to post a comment.