17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » டிட்வா புயல் எதிரொலி; ஊரக திறனாய்வுத் தேர்வு தள்ளிவைப்பு..

டிட்வா புயல் எதிரொலி; ஊரக திறனாய்வுத் தேர்வு தள்ளிவைப்பு..

எழுதியவர்: Askar November 29, 2025, 8:38 am

இலங்கையில் இருந்து தமிழகம் நோக்கி நகர்ந்து வரும் டிட்வா புயல், மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி வருகிறது. சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் உள்ளது. நவ.30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை வந்தடையும்.டிட்வா புயல் நெருங்கி வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இரவு முதலே மழை பெய்து வருகிறது.இதன்காரணமாக பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலை. மற்றும் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு இன்று நடைபெற இருந்தது. 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுத இருந்தனர். அவர்களில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 50 பேர் தேர்வு செய்யப்படுவர்.இந்த தேர்வு வங்கக்கடலில் நிலவும் ‘டிட்வா’ புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி, அந்த தேர்வு வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!