17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் அருகே சீரான நெல் கொள்முதல் பணிகள்.விவசாயிகள் மகிழ்ச்சி

சோழவந்தான் அருகே சீரான நெல் கொள்முதல் பணிகள்.விவசாயிகள் மகிழ்ச்சி

எழுதியவர்: mohan November 21, 2025, 10:02 am

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாத நிலையில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது இந்த நிலையில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை குடோன்களுக்கு எடுத்துச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர் குறிப்பாக முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர் இந்த நிலையில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை குடோன்களுக்கு கொண்டு செல்லும் பணிகளில் கடந்த இரண்டு நாட்களாக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்

இது குறித்து முள்ளிப்பள்ளம் ஊராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் முல்லை சக்தி கூறுகையில்

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால் அறுவடை செய்ய வேண்டிய நெல்களையும் அறுவடை செய்ய முடியாத நிலை இருந்து வந்தது மேலும் திடீரென மழை பெய்யும் பட்சத்தில் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் நனைந்து விவசாயிகளுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படும் ஆகையால் எங்களைப் போன்ற விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை குடோன்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என கூறியிருந்தேன் இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக முள்ளி ப்பள்ளம் ஊராட்சி கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது இதே போல் சோழவந்தான் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை குடோன்களுக்கு எடுத்துச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறினார் மேலும் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் தமிழக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!