மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதாகவும் சேதமடைந்த சாலைகளுக்கு பதிலாக புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர் இதனை தொடர்ந்து சோழவந்தாில் உள்ள நகரி ரோடு முதல் சித்தாலங்குடி அடுத்து உள்ள ஆணைகுளம் வரை சுமார் 9 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 கோடி மதிப்பில் புதிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர்கள் எஸ் எஸ் கே ஜெயராமன் பால்பாண்டியன் செயல் அலுவலர் செல்வகுமார்பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் 4வது வார்டு கவுன்சிலர் சிவாவாடிப்பட்டி நிர்வாகி பிரகாஷ் பேட்டை பெரியசாமி தொமுச நிர்வாகி பாலசுப்பிரமணியன் சங்கங்கோட்டை சந்திரன் ரவி கண்ணதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
சோழவந்தானில் 4 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை வெங்கடேசன் எம் எல் ஏ பணிகளை தொடங்கி வைத்தார்
எழுதியவர்: mohan November 19, 2025, 4:47 pm




You must be logged in to post a comment.