தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர் பாண்டியராஜா மற்றும் சென்னை சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் ஆகியோரின் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பை தடுத்தல் குறித்த புத்தகம் தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினரால் வெளியிடப்பட்டது. கோவை – பாலக்காடு இடையே ரயில் தண்டவாளத்தில் முடிந்த பேருயிர்களின் பயணத்தை தடுத்து நிறுத்தி, செயற்கை நுண்ணறிவு வெப்ப உணர்திறன் கேமராக்கள் (Artificial Thermal Sensing cameras) அமைக்க காரணமாக இருந்த சென்னையை சார்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா ஆகிய இருவர் மேற்கொண்ட முயற்சிகளின் தொகுப்பு அடங்கிய புத்தகத்தை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் மற்றும் சங்கரன் கோவில் எம்எல்ஏ ராஜா ஆகியோர் வெளியிட்டனர். தென்காசி மாவட்ட வன அலுவலர் புத்தகத்தை பெற்று கொண்டார். செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பை தடுத்தல் குறித்த நூல் வெளியீடு..
எழுதியவர்: Abubakker Sithik November 19, 2025, 9:28 am




You must be logged in to post a comment.