17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » பிற செய்திகள் » போட்டோ கேலரி » வடக்குத்தெரு சமூக நல அமைப்பு மற்றும் பிரைட் கிட்னி சென்டர் இணைந்து நடத்தும் மாபெரும் சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்…

வடக்குத்தெரு சமூக நல அமைப்பு மற்றும் பிரைட் கிட்னி சென்டர் இணைந்து நடத்தும் மாபெரும் சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்…

எழுதியவர்: ஆசிரியர் April 28, 2018, 2:54 am
கீழக்கரை NASA – வடக்குத்தெரு சமூக நல அமைப்பு மற்றும் மதுரை பிரைட் மருத்துவமனையும்  இணைந்து நடத்தும் மாபெரும் இலவச சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்  3-5-2018 (வியாழக்கிழமை) அன்று  நடைபெற உள்ளது.
இந்த முகாம் வடக்குத் தெரு முகைதீனீயா தைக்கா வளாகத்தில் நடைபெற உள்ளது.  இம்முகாம் காலை 09.00 மணி முதல் இநடைபெற உள்ளது.  இந்த முகாமில் மூத்த சிறுநீரக சிறப்பு மருத்துவர் K.முரளிதரன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க உள்ளார்.
இந்த மருத்துவ முகாமில் அனைத்து வகையான சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை குறித்து ஆலோசனை வழங்கப்படும்.  மேலும் சிறுநீரக டயாலிசிஸ் மருத்துவத்துக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.  அதே போல் இந்த முகாம் மூலம் மருத்துவம் செய்து கொள்ள வரும் நோயாளிகளுக்கு 30சதவீதம் வரை கட்டண சலுகை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!