17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தானில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தடை செய்யப்பட்ட மின்சாரம் . எதிர்க்கட்சி கூட்டங்களுக்கு மட்டும் மின்சாரத்தை நிறுத்துவதாக பரபரப்பு குற்றச்சாட்டு

சோழவந்தானில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தடை செய்யப்பட்ட மின்சாரம் . எதிர்க்கட்சி கூட்டங்களுக்கு மட்டும் மின்சாரத்தை நிறுத்துவதாக பரபரப்பு குற்றச்சாட்டு

எழுதியவர்: mohan September 30, 2025, 8:02 am

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பாக முகவர்களுக்கான‌ ஆலோசனை கூட்டம் நடைபெற்றது வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பாக முகவர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பாக முகவர்களுக்கான ஆலோசனைகள் வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கிருந்த நிர்வாகிகள் மின்சார வாரியத்திற்கும் மின்சார பணியாளர்களுக்கும் மாற்றி மாற்றி போன் செய்தார்கள் அப்போது எதிர்முனையில் இருந்து பேசிய நபர் பீஸ் போய் இருப்பதாகவும் சரி செய்தவுடன் விரைவில் மின்சாரம் வந்துவிடும் என்று தெரிவித்ததாக அங்கிருந்து நிர்வாகிகள் கூறினார்கள் மின்சாரம் இன்றி செல்போன் வெளிச்சத்தில் தொடர்ந்து ஆர் பி உதயகுமார் ஆலோசனைகள் வழங்கி பேசினார் ஒரு வழியாக மின்சாரம் வந்தது அதன்பின் ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையை நிறைவு செய்தார் அப்போது கூறிய ஆர் பி உதயகுமார் எதிர்க்கட்சிகள் நடக்கும் கூட்டங்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக இது போன்ற மின்தடைகளை ஆளுங்கட்சி செய்து வருவது கண்டனத்திற்குரியது அது எப்படி எடப்பாடி பழனிச்சாமி பேசினால் மின்தடை ஏற்படுகிறது தவெக தலைவர் விஜய் பேசினால் மின்தடை ஏற்படுகிறது ஆனால் முதல்வர் ஸ்டாலினோ துணை முதல்வர் உதயநிதியோ பேசும் போது மின்சாரம் தடைபடுவதில்லை இதற்கெல்லாம் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தக்கம் பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!