18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசாணை இல்லாததால் பழைய அரசுப்பள்ளி கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்.மூக்கையாத்தேவர் மணிடண்டபம் கட்டுவதில் நீடிக்கும் சிக்கல்.

அரசாணை இல்லாததால் பழைய அரசுப்பள்ளி கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்.மூக்கையாத்தேவர் மணிடண்டபம் கட்டுவதில் நீடிக்கும் சிக்கல்.

எழுதியவர்: mohan September 20, 2025, 4:14 pm

நடந்து முடிந்த சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் மறைந்த முன்னாள் எம் பியும்,முன்னாள் எம்எல்ஏவுமான பி.கே மூக்கையாத்தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து மணிமண்டபம் அமைக்க ரூ 8கோடி நநி ஒதுக்கப்பட்டு அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில் இந்த மணிமண்டபம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பள்ளி கல்வித் துறைக்குச் சொந்தமான பழைய அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளயில் மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு தேர்வு செய்த இடத்தில் பாதி கள்ளர் கல்வி கழகத்திற்கு சொந்தமான பழைய மாணவர் விடுதி உள்ளது.இதனால் அந்த இடத்தில் மறைந்த முன்னாள் எம்பியும் எம்எல்ஏவுமான மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்க கூடாது என வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் பார்வர்ட பிளாக்கட்சியினர்(சுரேந்திரன); மற்றும் கள்ளர் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மூக்கையாத்தேவர் மணிமண்டபம் கட்ட அவ்விடத்தில் பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி துவங்கியது.அரசு அதிகாரிகள் போலிசார் திமுக நிர்வாகிகள் அவ்விடத்தில் குவிந்தனர்;.பழைய கள்ளர் மாணவர் விடுதியை இடிக்க முற்பட்டபோது பார்வர்ட் பிளாக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கள்ளர் கல்விக்கழகத்திற்கு சொந்தமான பழைய மாணவர் விடுதியை இடிப்பதற்கு அரசாணை எங்கே செய்தறியாவது திகைத்த அதிகாரிகள் நாளை தருவதாக கூறிவிட்டு பள்ளிக்கல்வித் துறைக்கு சொந்தமான பழைய அரசு பள்ளி கட்டிடத்தை மட்டும் இடித்து வருகின்றனர். கள்ளர் கல்விக்கழகத்திற்கு சொந்தமான பழைய மாணவர் விடுதியை இடிக்க கூடாதென்று பார்வர்ட் பிளாக் கட்சியினர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் பழைய அரசு பள்ளி கட்டிட இடத்தில் மட்டும் மணிமண்டபம் அமைக்க கட்ட முடியுமா என்ற ஐயம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!