17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு..

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு..

எழுதியவர்: Abubakker Sithik September 18, 2025, 9:17 pm

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இதில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழி முறைகளாகக் கடைப்பிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமைத் திறனும், பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்! மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதி ஏற்கிறேன்! என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் துறையினர் உறுதிமொழி ஏற்றனர்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!