18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவை காரமடையில் இளம் வாக்காளர்கள் சேர்க்கை பிரச்சாரம்.!

கோவை காரமடையில் இளம் வாக்காளர்கள் சேர்க்கை பிரச்சாரம்.!

எழுதியவர்: Baker BAker September 2, 2025, 8:52 pm

கோவை மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்படி, மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியின் கீழ் காரமடை பகுதியில் அமைந்துள்ள கிரைஸ் த கிங் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்கான பிரச்சாரம் மற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்தனர்.

மாணவ-மாணவிகளிடம் சிறப்பு விருந்தினர்கள் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக உரையாற்றினர். இளம் வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக சந்தேகங்களை கேட்டுக் கொண்டு தெளிவுபடுத்திக் கொண்டனர்.

மேலும், திரளான மாணவர்கள் கலந்து கொண்டு, சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் வருவாய் வட்டாட்சியர், தேர்தல் துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் கலந்து

கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!