17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கல்லூரியில் வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்கான பிரச்சாரம் மற்றும் சிறப்பு முகாம்

கல்லூரியில் வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்கான பிரச்சாரம் மற்றும் சிறப்பு முகாம்

எழுதியவர்: mohan September 2, 2025, 8:51 pm

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் அமைந்துள்ள கிரைஸ் த கிங் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்கான பிரச்சாரம் மற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது

கோவை மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவுப்படி மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிரைஸ் த கிங் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்கான பிரச்சாரம் மற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர் மாணவ மாணவிகளிடம் தேர்தல் தொடர்பாக சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரையாற்றினர் இளம் வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது மற்றும் சந்தேகங்களை கேட்டுக்கொண்டனர் மாணவ மாணவிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர் இளம் வாக்காளர்கள் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் வருவாய் வட்டாட்சியர் தேர்தல் துணை வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர்கள் கல்லூரி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!