18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » உலக செய்திகள் » செய்திகள் » பிற செய்திகள் » போட்டோ கேலரி » சவுதி அரேபியா ஜித்தாவில் 13வது இஸ்லாமிய மாநாடு…

சவுதி அரேபியா ஜித்தாவில் 13வது இஸ்லாமிய மாநாடு…

எழுதியவர்: ஆசிரியர் April 24, 2018, 12:03 pm

ஜித்தாவில் வருடந்தோறும் தமிழ் தாவா சென்டர் மற்றும் தமிழ் மக்கள் ஒருங்கிணைப்பில் இஸ்லாமிய தமிழ் மாநாடு நடைபெறும்.  இந்த வருடம் கடந்த 20/04/2018  தேதி அம்மாநாடு நடைபெற்றது.  இந்த வருடம் இஸ்லாமிய மாநாநடு ஆஷிஃபா கொலைக்கான கண்டன மாநாடாகவும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டில் இப்ராஹிம் மதனீ,  நூஹ் அல்தாஃபி,  அஸ்ஹர் ஸீலானி மற்றும் அப்துல் வதூத் ஜிப்ரி ஆகியோர் மறுமையின் அவலங்கள்,  இளைய சமுதாயமே,  விதி-ஓர் ஈமானிய பார்வை மற்றும் நாம் சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் இந்த நிகழ்வில் சிறப்பம்சமாக குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள்,  பெரியவர்களுக்கான சிறப்பு போட்டிகள் என பல வகையான போட்டிகளும் நடைபெற்றது.

இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக தமிழ் தாவா கமிட்டி தலைவர் சகோதரர்.சாகுல் ஆசிஃபா கொலை வழக்கை கண்டித்து கண்டன உரையாற்றினார்.   மேலும் இந்நிகழ்ச்சியில் தமுமுக மேற்கு மண்டல நிர்வாகிகள் உட்பட 1500கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!