18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

எழுதியவர்: Abubakker Sithik August 19, 2025, 10:05 am

தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தகுதி வாய்ந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 18.08.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார்.

மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 475 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனு தாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) நம்பிராயர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!