17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேவகோட்டையில்தமிழ் சிறகுகள் அமைப்பு சார்பில் இரத்ததான முகாம்

தேவகோட்டையில்தமிழ் சிறகுகள் அமைப்பு சார்பில் இரத்ததான முகாம்

எழுதியவர்: mohan August 17, 2025, 4:50 pm

79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் சிறகுகள் அமைப்பினர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி இரத்த வங்கி இனைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது .சிறப்பு அழைப்பாளராக காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி எம்எல்ஏ, சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் , தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் . இரத்ததான முகாமை தொடங்கி வைத்தனர் . அமமுக நகரச் செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் கமலக்கண்ணன் , தேவகோட்டை வர்த்தக சங்கத் தலைவர் மகபூப் பாச்சா ,எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் கலாம், காங்கிரஸ் கட்சி நகர தலைவர், வழக்கறிஞர் சஞ்சய், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மீரா உசேன் ,நகர் மன்ற உறுப்பினர் ஷேக் அப்துல்லா , இரத்ததான முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி சார்பாக மருத்துவக் குழு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக இரத்த வகை தெரிந்து கொள்ளும் நபர்களுக்கு இரத்த வகை, மற்றும் சுகர் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. காவல்துறையினர் , மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தனர். இரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு தமிழ் சிறகுகள் அமைப்பின் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டனர். தமிழ் சிறகுகளின் அமைப்பின் தலைவர் எஸ். எம். டி அப்துல் ரகுமான் , செயலாளர் செய்யது அபுதாஹிர் , பொருளாளர் அருண்குமார் மற்றும் தமிழ் சிறகுகள் அமைப்பின் நிர்வாகிகள் இரத்ததான முகாமில் சேவைகள் புரிந்தனர் .மற்றும் பொதுமக்கள், ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் .

நிருபர்: மன்சூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!