17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை (NASA) சார்பாக சுதந்திர தின நிகழ்வு..

கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை (NASA) சார்பாக சுதந்திர தின நிகழ்வு..

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2025, 11:41 am

வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை – நாசா வின் சார்பாக இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சி இன்று காலை 8 மணியளவில் கீழக்கரை வடக்குத்தெருவில் உள்ள நாசா அலுவலகம் அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அரசு மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து, மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ அன்புடன் வாழ வேண்டும், பிரிவினைவாத கருத்துக்கு இடம் கொடுக்காமல் நாட்டு மக்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கீழக்கரை நகர்மன்ற உறுப்பினர். மீரான் அலி, வடக்குத் தெரு ஜமாஅத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வை நாசா தலைவர் முஸம்மில் இப்ராஹிம் தலைமையில்  ஏற்பாடு செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!