18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மன்னாடிமங்கலத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மன்னாடிமங்கலத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

எழுதியவர்: mohan August 6, 2025, 5:00 pm

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சியில் நடுத்தெருவில் மகா சக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் நடுத்தெரு பகுதியில் சாய்ந்த நிலையில் பல மாதங்களாக மின்கம்பம் உள்ளதாகவும் பலமுறை மின்வாரிய பணியாளர்களிடம் கூறியும் மின்கம்பத்தை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மழைக்காலங்களில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய வேண்டுமென இந்த பகுதி பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் மின்கம்பம் அருகே குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் தொற்றுநோய் பரவி சுகாதாரத் கேடு ஏற்படுவதாகவும் கூறுகின்றனர் ஆகையால் ஊராட்சி சார்பில் குப்பைகளை அள்ளி சுகாதாரக் கேட்டை தடுக்க வேண்டும் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!