17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை முன் வைத்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி சந்திப்பு.

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை முன் வைத்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி சந்திப்பு.

எழுதியவர்: mohan August 6, 2025, 3:36 pm

காரைக்கால் முதல் தூத்துக்குடி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை மார்கமாக ரயில்வே திட்டத்தை மீண்டும் துவங்கி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது,

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரயில்வே அருங்காட்சியகம் அமைப்பது,

சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பகல் நேர விரைவு வண்டிகளை இயக்குவது,

அறந்தாங்கி பகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகள்.,

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி, இராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், மற்றும் சூடியூர், சத்திரக்குடி, வாலாந்தரவை, மண்டபம் கேம்ப் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்வது,

தங்கச்சிமடம் ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து ரயில்கள் நின்று செல்வது,

ராமேஸ்வரம் – சென்னை ரயில் பெட்டிகளை புதிய பெட்டிக்களாக மாற்றுவது,

ராமேஸ்வரம் வரையிலான புதிய ரயில்களை இயக்குவது,

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்து வலியுறுத்தினார்.

இதுகுறித்து ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் நவாஸ்கனி எம்பி அளித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது.,

தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மானாமதுரையில் இருந்து அபிராமம் பார்த்திபனூர் கமுதி சாயல்குடி வழியாக தூத்துக்குடி வரை புதிய ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இந்த புதிய ரயில் பாதை வழியாக ரயில்கள் இயக்கப்பட்டால் தென் மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைவார்கள், வணிக ரீதியாகவும் பயனுள்ளதாக அமையும் இந்த ரயில் பாதையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
—–
காரைக்கால் பகுதியில் இருந்து தூத்துக்குடி வரை கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக திட்டமிடப்பட்ட ரயில்வே வழித்தட திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மக்கள் உள்ளிட்ட கடலோர பகுதி மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.

வணிகரீதியிலும் பெரும்பான்மையானோர் பயனடைவார்கள்.

எனவே இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
– சென்னை-ராமேஸ்வரம் இடையே இரு மார்க்கமும் திருச்சி, விருத்தாசலம் வழியாக பகல் நேர விரைவு வண்டி, தினசரி இன்டர்சிட்டி வகை ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீட்டர்கேஜ் முறையில் இயக்கப்பட்டு வந்த ரயில்களை பிராட் கேஜ் முறையில் மாற்றப்படும்போது நிறுத்தப்பட்டிருந்த வழித்தடங்களில் மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இராமேஸ்வரம்- கோயம்புத்தூர், மதுரை, பழனி, பொள்ளாச்சி வழியாக
இரு மார்க்கமும்,

ராமேஸ்வரம் – பாலக்காடு பயணிகள் வண்டி இரு மார்க்கமும், ராமேஸ்வரம் – திருச்சி இரவு நேர பயணிகள் வண்டி இரு மார்க்கமும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மக்களின் கோரிக்கையாக இருக்கும் கன்னியாகுமரி – ராமேஸ்வரம், ராமேஸ்வரம் – திருப்பதி அந்தியோதயா விரைவு வண்டிகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கோயம்புத்தூர் – மதுரை இன்டர்சிட்டி மற்றும் மும்பை எல் டி டி- மதுரை ஆகிய விரைவு வண்டிகளை ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இராமேஸ்வரம் திருப்பதி (16779/16780) விரைவு வண்டி அதிகமாக பக்தர்கள் பயன்படுத்தக்கூடிய வழித்தடமாக அளிக்கிறது.

தற்போது வாரம் மூன்று முறை இயக்கப்பட்டு வரும் இந்த வண்டியை தினசரி வண்டியாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தற்போது வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வரும் இராமேஸ்வரம் – ஓகா (16733/16734)
விரைவு வண்டியை வாரம் மூன்று முறை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பெங்களூர் ஹைதராபாத் மற்றும் மங்களூர் ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் வண்ணம் புதிய ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும்.

ஹௌரா- கொல்கத்தா- திருச்சி ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வாரம் மூன்று முறை இயக்கப்படும் ரயிலை தினமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் வட மாநிலங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயில்களை மதுரை வழியாக இயக்கினால் கூடுதல் வருவாயை ஈட்டித்தரும்.

பொது மக்களும் அதிகம் அதன் மூலம் பயனடைய முடியும்.
எனவே மதுரை வழியாக விரைவு வண்டிகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
—-
இராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், மற்றும் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ரயில்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.,

சிலம்பு விரைவு வண்டி (20681/20682) இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சுழி சட்டமன்ற தொகுதி நரிக்குடி அல்லது திருச்சுழி ரயில் நிலையத்தில் நிறுத்தம்,

இராமேஸ்வரம் – திருச்சி பயணிகள் வண்டி சூடியூர், சத்திரக்குடி, வாலாந்தரவை மற்றும் மண்டபம் கேம்ப் ரயில் நிலையங்களில் நிறுத்தம்,

கன்னியாகுமரி – இராமேஸ்வரம் விரைவு வண்டி மண்டபம் மற்றும் பரமக்குடி ரயில் நிலையங்களில் நிறுத்தம்,

ராமேஸ்வரம் தாம்பரம் வண்டி மண்டபம் மற்றும் உச்சிப்புளி ரயில் நிலையத்தில் நிறுத்தம்,

இராமேஸ்வரம்- சென்னை சேது விரைவு வண்டி மண்டபம் ரயில்நிலையத்தில் நிறுத்தம்,

ராமேஸ்வரம் செகந்தராபாத் விரைவு வண்டி பரமக்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தம்.

இராமேஸ்வரம் – பெரோஸ்பூர் (20973/20974) தொடர்வண்டி இராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் நிறுத்தம்,

இராமேஸ்வரம் – அயோத்தியா (22613/22614) தொடர்வண்டி இராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் நிறுத்தம்,

இராமேஸ்வரம் – பனாரஸ் (22535/22536) தொடர்வண்டி இராமநாதபுரத்தில் நிறுத்தம்,

இராமேஸ்வரம்- புவனேஸ்வர் (20895/20896) தொடர் வண்டி அனக்காப்பள்ளி ரயில் நிலையத்தில் நிறுத்தம்,

உள்ளிட்ட ரயில்களை குறிப்பிடப்பட்டுள்ள ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தங்கச்சிமடம் ரயில் நிலையம் 1992 வரை செயல்பாட்டில் இருந்து வந்தது. கடந்த 20 ஆண்டுகளாக அந்த ரயில் நிலையம் செயல்படாமல் இருக்கிறது.
அந்த வழியாக பல்வேறு ரயில்கள் கடந்து சென்றாலும் அந்த ரயில் நிலையம் செயல்பாட்டில் இல்லாததால் அந்த பகுதியில் ரயில்கள் நிற்காமல் செல்வதால் பகுதி மக்கள் பெரிதும் வருந்துகின்றனர்.

மேலும் தங்கச்சிமடம் பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது, 30 ஏக்கர் காலி இடமும் அங்கு உள்ளது. அந்த இடத்தில் ரயில்வே யார்ட் அமைக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளது.

எனவே இதனையும் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாம்பன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு நம் நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என்று எங்களுடைய மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து கொண்டிருக்கின்றார்கள்.
எங்களுடைய ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து சென்று உலக அரங்கில் நம் நாட்டின் நன்மதிப்பை உயர்த்தியவர். ஏவுகணை நாயகன் என போற்றப்பட்டவர், அறிவியல் ஆராய்ச்சி துறையில் உலக அரங்கில் இந்தியாவை உயர்த்தியவர், எனவே அவரது பெயருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாம்பன் ரயில்வே மேம்பாலத்திற்கு அவரது பெயரை சூட்டிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்டம் அதிகமான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வந்து செல்லக்கூடிய மாவட்டம், ராமேஸ்வரம் திருக்கோயில், தனுஷ்கோடி உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் சுற்றுலா தளங்களும் மிகுதியாக உள்ள மாவட்டம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பாம்பன் ரயில்வே மேம்பாலம் காண்போரை கவரும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளது, பழைய ரயில்வே மேம்பாலம் வரலாற்று சிறப்புமிக்கதாக விளங்கியது, எனவே இங்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரயில்வே அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயில் பெட்டிகள் மிகவும் பழைய பெட்டிகளாக இருப்பதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

ரயில் பெட்டிகளை மாற்றி புதிய பெட்டிகளாக அமைக்க நெடு நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

எனவே சென்னை – ராமேஸ்வரம் இயக்கப்படும் ரயில் பெட்டிகளை மேம்படுத்தப்பட்ட புதிய பெட்டிகளாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ராமேஸ்வரம் ரயில்வே நிலையத்திற்கு வடக்கே அமைந்துள்ள “ராம் பார்க்” யாத்திரிகர் விடுதி, ஒரே நேரத்தில் 300 யாத்திரிகர்கள் தங்கும் வசதியுடன், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி மண்டபங்களுடன் இயங்குகிறது. இருப்பினும் தற்போது அந்த இடத்துக்கு நேரடி பாதை இல்லாததால் யாத்திரிகர்கள் சுமார் 250 மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இந்த சிரமத்தை தவிர்க்க, 10 அடி அகலமுள்ள நடைபாதை ஒன்றை உருவாக்கினால் யாத்திரிகர்கள் மிக எளிதாகவும் சுருக்கமான நேரத்தில் அந்த இடத்தை அடைய முடியும். எனவே, இது தொடர்பாக சுவர் வழியாக நடைபாதை அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

• மேலும், ராமேஸ்வரம் ரயில்வே நிலையத்தில் பிட்லைன் மற்றும் ஸ்டேப்லிங் லைன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி மக்கள் அறந்தாங்கி வழியாக கூடுதலாக ரயில்களை இயக்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சென்னையிலிருந்து அறந்தாங்கி வழியாக காரைக்குடிக்கு விரைவு வண்டி இயக்க வேண்டும்,

திருவாரூர் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக கரைக்குடிக்கு ரயில் வழித்தடம் மின்மயமாக்கல் திட்டமிடப்பட்டும் தாமதமாகி கொண்டுள்ளது .
அதனை துரிதப்படுத்த வேண்டும் .

செங்கோட்டை தாம்பரம் வாராந்திர 3 நாள் ரயில்களை தினசரியாக இயக்க வேண்டும் .

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக மதுரைக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட வேண்டும் .

காரைக்குடி – மயிலாடுதுறை சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட நேரடி ரயில் மீண்டும் இயக்கப்பட வேண்டும் .

காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருவாரூர் மயிலாடுதுறை வழியாக எழும்பூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்.

சென்னையில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் பல்லவன் விரைவு வண்டி அறந்தாங்கி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் அல்லது காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி வரை இணைப்பு ரயில் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறந்தாங்கி பகுதியிலிருந்து பொதுமக்கள் திருவாரூர் மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களுக்கு அதிகம் பயணிக்க கூடியவளாக இருக்கிறார்கள்.

எனவே அறந்தாங்கி வழியாக திருவாரூர் மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களை இணைக்கும் வண்ணம் கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறந்தாங்கி பகுதியில் ரயில்வே சரக்கு யார்ட்டு (Goods yard) அமைப்பது பராமரிப்பு பணிக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே அறந்தாங்கி பகுதியில் ரயில்வே Goods yard அமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் அவர்களை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!