18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பாலை பகுதியில் கடல் உள் வாங்கியது – மக்கள் பீதி..

திருப்பாலை பகுதியில் கடல் உள் வாங்கியது – மக்கள் பீதி..

எழுதியவர்: ஆசிரியர் April 22, 2018, 6:07 pm
இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் கடல்சீற்றம் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் தெரிவித்திருந்தது.   அதைத் தொடர்ந்து கடலோர பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் கடலோர கோயில் செல்லும் பக்தர்களுக்கும் காவல்துறையினர் தடை விதித்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று (22/04/2018) இராமநாதபுரம் மாவட்டம்  திருப்பாலைக்குடி கடல் பகுதி சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை  உள்வாங்கியதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் அனைத்தும் தரைதட்டியது.  இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் பீதியடைந்த நிலையில் உள்ளனர்.
இந்நிகழ்வு பற்றி அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், “கடந்த முறை சுனாமி பேரழிவு ஏற்பட்ட சமயத்திலும் இது போன்றே கடல் உள் வாங்கியது, அந்நினைவால் இன்னும் மக்கள் பீதியில் உள்ளனர்” என்றார்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!