17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா வழக்கு குற்றவாளிகள் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு

கஞ்சா வழக்கு குற்றவாளிகள் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு

எழுதியவர்: Abubakker Sithik July 18, 2025, 9:58 pm

தென்காசி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கடங்கநேரி நடுத் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் முருகேசன் (45) மற்றும் அச்சன்புதூர் காவல் நிலைய கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட அச்சன்புதூர் ஒடுக்கத்து தெருவை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சதீஷ் (21) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!