17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..

கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..

எழுதியவர்: Abubakker Sithik July 17, 2025, 2:50 pm

தென்காசி மாவட்டத்தில் பூக்கடை உரிமையாளரை கொலை செய்த வழக்கின் குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியில் கடந்த 16.06.2025 அன்று பூ கடை உரிமையாளரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியான ஊத்துமலை முருகையா என்பவரின் மகன் கார்த்திக் பிரபாகரன் (35) கைது செய்யப்பட்டார்.

 

இந்நிலையில், கொலை குற்றவாளி பிரபாகரன் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!