கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வள்ளுவர் நகரவை தொடக்கப் பள்ளியில் கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது .
இவ்விழாவிற்கு நகர்மன்றத் தலைவர் திருமதி மெஹரிபா பர்வின் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் கல்வி வளர்ச்சி நாள், காமராசர் பற்றி பேசினார்கள்.மாணவ மாணவிகள் காமராசர்பற்றி பாடலைப் பாடினார்கள்.இந்நிகழ்ச்சியில் காரமடை வட்டாரகல்வி அலுவலர் தமிழ்ச் செல்வி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பள்ளியின் கல்வியாளர் முன்னாள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.பெற்றோர்கள் சார்பில் பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கப்பட்டது. இதில் மாணவர்களுக்கு தேவையான இருக்கைகள் 150, வாளிகள்,நோட்டுப் புத்தகம் மற்றும் பள்ளிக்குத் தேவையான பொருட்கள் வழங்கினர்.போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நகர்மன்றத் தலைவர் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியை பேபி எஸ்தர் நன்றியுரை கூறினார்
காமராஜர் பிறந்த நாள்,கல்வி வளர்ச்சி நாள் விழா!
எழுதியவர்: mohan July 15, 2025, 6:36 pm




You must be logged in to post a comment.