17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாவட்ட செய்திகள் » செய்திகள் » திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி அருகே உள்ள சதுர்வேத கணபதி கோவில் மண்டல அபிஷேக விழா.

திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி அருகே உள்ள சதுர்வேத கணபதி கோவில் மண்டல அபிஷேக விழா.

எழுதியவர்: mohan June 30, 2025, 5:38 pm

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி திருவேடகம் விவேகானந்தா கல்லூரி அருகில் அமைந்துள்ள அருள்மிகு சதுர்வேத கணபதி கோவில் கும்பாபிஷேகம் கடந்த வைகாசி மாதம் இரண்டாம் தேதி நடைபெற்ற நிலையில் கோவிலின் முன்பு மண்டல அபிஷேகம் இன்று காலை நடைபெற்றது கோவில் முன்பு யாக வேள்வி நடைபெற்று நந்தி பகவானுக்கு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சதுர்வேத கணபதிக்கு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் தீபாராதனை காட்டப்பட்டது தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது இதில் திருவேடகம் தச்சம்பத்து மேலக்கால் சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கணபதியை தரிசனம் செய்து சென்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!