18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் போதைக்கு எதிராக உறுதி மொழி ஏற்பு..

தென்காசியில் போதைக்கு எதிராக உறுதி மொழி ஏற்பு..

எழுதியவர்: Abubakker Sithik June 27, 2025, 3:32 pm

தென்காசியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென்காசி ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் ஆகியோர் தலைமையில் பள்ளி மாணவர்கள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

பின்னர், தென்காசி மாவட்ட காவல் துறையின் சார்பாக பள்ளி மாணவர்களின் சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் தப்பாட்ட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்பேரணியானது பள்ளியில் தொடங்கி தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

 

சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு: போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் அதே வேளை, தென்காசி மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப் பட வேண்டும். போதையில், போக்குவரத்து விதி முறைகளை மீறுவோர், அதிவேகத்தில் வாகனங்களை இயக்கி பொது மக்களை அச்சுறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளி மாணவர்களிடம் போதை பழக்கத்தை ஏற்படுத்துவோர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கடும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!