18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே சலசலப்பு.!

ராமநாதபுரம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே சலசலப்பு.!

எழுதியவர்: Baker BAker June 24, 2025, 11:18 am

ராமநாதபுரத்தில் ஜல் ஜீவன் திட்டப் பெயர் மாற்றம் குறித்த சர்ச்சை: கொடுமையாக எதிர்த்த பாஜக நகர்மன்ற உறுப்பினர்!

ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில், மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ குடிநீர் திட்டத்தின் பெயரை ‘சிறப்பு கூட்டு குடிநீர் திட்டம்’ என மாற்றியதற்கு நகராட்சி கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்தனர். ராமநாதபுரம் நகராட்சித் தலைவர் ஆர்.கே. கார்மேகம் தலைமையில், துணைத் தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் ஆணையாளர் அஜிதா பர்வீன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மொத்தம் 63 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

இந்த விவகாரத்தை பாஜக நகராட்சி கவுன்சிலர் குமார் கடுமையாக எதிர்த்தார். அவர், “ஜல் ஜீவன் திட்டத்தின் பெயரை மாற்றி அரசாணை வழங்கியது யார்? இந்தியா முழுவதும் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஜல் ஜீவன் திட்டத்தின் பெயரை ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் திமுக அரசு மாற்றியுள்ளது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்தார். மேலும், திமுக அரசு “ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு” போல ஜல் ஜீவன் திட்டத்தை மறைப்பதாகவும் அவர் ஆட்சேபித்தார்.

இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. நகராட்சித் தலைவர் கார்மேகம், இது சம்பந்தமான அரசாணை கவுன்சிலர்களுக்கு வழங்கப்படும் என்றும், அவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் சரி செய்யப்படும் என்றும் பேசி மழுப்பினார்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!