18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, வெண்ணெய்-யை கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அழையும் கதையாக உள்ளது., – கீழடி விவகாரம் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, வெண்ணெய்-யை கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அழையும் கதையாக உள்ளது., – கீழடி விவகாரம் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

எழுதியவர்: mohan June 18, 2025, 5:33 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராமத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வலியுறுத்தி 100 கோவில்களில் வழிபாடு மற்றும் 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு, தும்மக்குண்டு கிராமத்தில் உள்ள வைரவசுவாமி திருக்கோவிலில் வழிபாடு செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.,

oppo_0

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.,

கீழடி விவகாரம் குறித்து திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு,

திமுக தான் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கிறார்கள், அவர்கள் தான் ஆட்சியிலும் இருக்கிறார்கள், இது மக்களை ஏமாற்றுகிற நாடக கம்பெனி நடத்தும் நாடகம்.,

அதிகாரத்தை வைத்துள்ளவர்கள், முறையாக முறையிட்டு, அதற்கு தகுந்த தீர்வு கண்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.,

மக்களுக்காக நீழி கண்ணீர் வடிக்கிற விவகாரம் தான் இந்த போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு இன்று வெண்ணெய்-யை கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அழையும் கதையாக உள்ளது.,

அதிகாரம் கையில் இருக்கிறது, 38 எம்.பி., நீங்க தான் இருக்கீங்க, நீங்க தான் முதல்வராக இருக்கிறீர்கள்., டெல்லி போகும் போது வெள்ளை கொடி, வெள்ளை புற, வெள்ளை குடை எல்லா சமாதான தூது எடுத்து போவது, இங்கு வந்து வீர வசனம் பேசுவது இதை யார் மக்கள் நம்புவார்களா, யாரும் நம்ப மாட்டார்கள்., அதனால் ஸ்டாலின் குடும்ப கம்பெனியின் நாடகம் முடிந்துவிட்டது.,

மாம்பழத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போராட்டம் நடத்த அறிவித்துள்ளார்., விவசாயிகளின் பாதுகாவலர் என்றால் எடப்பாடி பழனிச்சாமி தான்., என பேட்டியளித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!