17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தீர்த்தவாரி திருவிழாவட்ட பிள்ளையார் கோவில் பகுதி ஒருவழி பாதையாக மாற்றம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தீர்த்தவாரி திருவிழாவட்ட பிள்ளையார் கோவில் பகுதி ஒருவழி பாதையாக மாற்றம்

எழுதியவர்: mohan June 18, 2025, 2:13 pm

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திருவிழாவின் கடைசி நாள் திருவிழாவான தீர்த்தவாரி திருவிழா இன்று இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் நடைபெற உள்ளது இதற்காக வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன் குடும்பத்தினர் ஏற்பாட்டில் தீர்த்தவாரிக்கான இந்த பூஅலங்கார வேலைப்பாடுகள் மற்றும் வைகை ஆற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது காவல்துறை சார்பில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது முக்கியமாக தீர்த்த வாரி திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் வட்ட பிள்ளையார் கோவில் வழியாக வந்தது ஜெனகை மாரியம்மனை தரிசனம் செய்து விட்டு சனீஸ்வரன் கோவில் வழியாக வெளியேறி செல்ல வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வைகை ஆற்றின் பல்வேறு பகுதிகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் இளமதி தலைமையில் கோவில் பணியாளர்கள் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் செயல் அலுவலர் செல்வகுமார் ஆகியோர் மேற்பார்வையில் பேரூராட்சி பணியாளர்கள் தீர்த்தவாரிக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் பொதுமக்கள் வட்ட பிள்ளையார் கோவில் வழியாக வந்து ஆற்றுக்குள் சென்று ஜெனகை மாரியம்மனை தரிசனம் செய்துவிட்டு சனீஸ்வரன் கோவில் வழியாக வெளியேறிச் செல்ல வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுபட்டுள்ளது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!