18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கழிவுநீர் தேங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்

கழிவுநீர் தேங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்

எழுதியவர்: mohan June 17, 2025, 7:52 am

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சி வடக்கு தெருவுக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியின் பல இடங்களில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதார கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர் இந்த ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் பணி செய்யும் நிலையில் அனைத்து பணியாளர்களும் தங்களது சொந்த பணிகளை பார்க்க சென்று விடுவதால் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாகவும் ஊராட்சி செயலாளர் சொல்லியும் துப்புரவு பணியாளர்கள் கேட்க மறுப்பதாகவும் ஆகையால் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் தேங்காமலும் தொற்றுநோய் பரவி சுகாதாரக் கேடு ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க முள்ளிப்பள்ளம் ஊராட்சி 1வது வார்டு முன்னாள் கவுன்சிலர் முல்லை சக்தி மற்றும் வார்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!