18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நல்லிருக்கை மற்றும் வண்ணாகுண்டு ஆகிய கிராமங்களில் உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட முகாம்.!

நல்லிருக்கை மற்றும் வண்ணாகுண்டு ஆகிய கிராமங்களில் உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட முகாம்.!

எழுதியவர்: Baker BAker June 16, 2025, 12:04 am

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லிருக்கை மற்றும் வண்ணாகுண்டு ஆகிய கிராமங்களில் ”உழவரைத்தேடி வேளாண்மை உழவர்நலத்துறை” திட்டம் முகாம் நடைபெற்றது.  வேளாண்மை உழவர்நலத்துறை மற்றும் சார்புத்துறைகளின் புதிய தொழில்நுட்பங்கள், திட்டங்கள், வேளாண் விலைபொருட்கள் மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல், இடுபொருட்கள் குறித்த விழிப்பணர்வு ஏற்படுத்துதல், பயிர் காப்பீடு செய்வதால் ஏற்படும் நன்மைகள், வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் மேலாண்மை முறைகள், பண்ணைக்குட்டைகளில் மீன்கள் வளர்த்தல், உயிர்ம வேளாண்மையின் அவசியம், உழவர் செயலி சேவைகள், போன்ற திட்டங்கள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது

விதை நேர்த்தி செயல்முறை விளக்கம் செய்து அதன் நன்மையை உதவி வேளாண்மை அலுவலர் பழனி கூறினார், அதனைத் தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து தீர்வுகள் வழங்கப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு ஒருமுறை (2வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில்) வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் ஒழு குழுவும் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும் வேளாண்மை மற்றும் சார்புத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து கிராமத்திற்குச் சென்று திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.

                                            திருப்புல்லாணி வட்டாரத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது. முகாமில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்          

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!