17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » IUML மகளிர் அணி சார்பில் பரிசளிப்பு விழா..

IUML மகளிர் அணி சார்பில் பரிசளிப்பு விழா..

எழுதியவர்: Abubakker Sithik June 15, 2025, 9:09 am

கடையம் அருகே உள்ள ரவண சமுத்திரம் பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில், முதலியார் பட்டி, திருமலையப்பபுரம், பொட்டல் புதூர், ஆகிய அரசுப் பள்ளி, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி ரவண சமுத்திரம் ஹிதாயத்துல் முஸ்லிமீன் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. IUML மகளிர் அணி மாவட்ட செயலாளர் நாகூர் அலி பாத்திமா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கடையம் ஒன்றிய பொறுப்பாளர் ஜன்னத் பிர்தவ்ஸ், வீரா சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவி ஜீனத் பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் செய்யது நாகூர் ஹாஜி வரவேற்றார். பிரைமரி தலைவர் இக்பால், மாவட்ட துணைச் செயலாளர் யஹ்யா, மாணவர் அணி மாவட்ட தலைவர் ரிபாய், நஸீஹா ஆலிமா ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட அமைப்புச் செயலாளர் கட்டி அப்துல் காதர், நெல்லை மண்டல பொறுப்பாளர் பரிதா அப்துல் காதர், பிரைமரிச் செயலாளர் சாகுல் ஹமீது காசியார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். திமுக மாவட்ட பிரதிநிதி மாலிக் நகர் யாகூப், ரவண சமுத்திரம் பிரைமரி துணைச் செயலாளர் தளபதி இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!