17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் சட்டம் சார்ந்த கலந்தாய்வு கூட்டம்..

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் சட்டம் சார்ந்த கலந்தாய்வு கூட்டம்..

எழுதியவர்: Abubakker Sithik June 15, 2025, 7:54 am

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில், சட்டம் சார்ந்த கலந்தாய்வு கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான இந்த கூட்டத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் உதவி அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சட்டம் சார்ந்த பொருட்கள் குறித்து விவாதிக்கப் பட்டது. மேலும் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட வழக்குகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் ஆராயப்பட்டு எதிர்காலத்தில் அதனை தவிர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய குற்ற வழக்குகளில் சிறப்பாக வாதாடி காவல் அதிகாரிகளுடன் துணை புரிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர உறுதுணையாக இருந்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் உதவி அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கும், குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் துறையினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!